×

ஏலச்சீட்டு மோசடி: தம்பதி கைது

ஆவடி: ஆவடி அருகே பட்டாபிராம் பஜார், 3வது குறுக்கு தெருவில் வசிப்பவர் முருகையன் (68). அதே பகுதியை சேர்ந்தவர் ரூபி (எ) முருகன் (45). இவரது மனைவி நிர்மலா (40). அப்பகுதியில் இத்தம்பதி கடந்த 5 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில், தனது பெயரில் ரூ.5 லட்சம், தனது மகன் பெயரில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு 2 சீட்டுகளில் முருகையன் பணம் கட்டியுள்ளார். இந்த 2 ஏலச்சீட்டுகளும் கடந்த 2015ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிறைவு பெற்றது. எனினும், அந்த 2 ஏலச்சீட்டுகளுக்கான மொத்த பணத்தை தராமல் ரூபி (எ) முருகன், நிர்மலா தம்பதியினர் இழுத்தடித்து வந்துள்ளனர். இதேபோல், அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இத்தம்பதி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இத்தம்பதி வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இப்புகார்களின்பேரில் ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணமோசடியில் ஈடுபட்டு தலைமறைவான தம்பதியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏலச்சீட்டு நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட தம்பதி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ஆய்வாளர் பாலன் தலைமையில் தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று ரூபி (எ) முருகன், நிர்மலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நேற்று மாலை சென்னை கொண்டு வந்தனர். பின்னர் இத்தம்பதியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post ஏலச்சீட்டு மோசடி: தம்பதி கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Murugayan ,3rd Cross Street, Pattabram Bazar ,Ruby ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...